நியூயார்க் திரைப்பட விழாவில் ,3;: சர்வதேச பட விழாவுக்கு ‘3’ படம் தேர்வானது மகிழ்ச்சி: ஐஸ்வர்யா!!!

Tuesday, ,May, 22, 2012
3 படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது. 3 படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தின் நாயகனாக தனது கணவர் தனுஷை நடிக்க வைத்தார். நாயகியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தில் உள்ள ஒய்திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதனால் இந்தபடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. சமீபத்தில் வெளியான இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக ஆயத்தமாகி வருகிறார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து 3 படத்தின் டைரக்டரும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கூறுகையில், என்னுடைய முதல்படமே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது என்று எண்ணும்போது ரொம்ப பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தவிழாவில் பங்கேற்பதற்காக நான் நம்ம நாட்டு பாரம்பரிய உடையில் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்...

தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படம் சமீபத்தில் ரிலீசானது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் இப்படம் வந்தது. ‘3’ படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லாததால் நஷ்டமடைந்து விட்டதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் குற்றம் சாட்டினார். போலீசிலும் புகார் செய்தார்.

இந்த சர்ச்சையால் மனம் உடைந்து இருந்த ஐஸ்வர்யாவுக்கு ‘3’ படம் நியூயார்க்கில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விழாவில் ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட மேலும் சில தமிழ் படங்களும் திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்க ஐஸ்வர்யா நியூயார்க் செல்கிறார். அவர் கூறியதாவது:-

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ‘3’ படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது இயக்குனரான என்னை அவ்விழாவில் கவுரவிக்க இருக்கிறார்கள். சர்வதேச அளவுக்கு ‘3’ படம் போய் இருப்பது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments