இந்தி 'ஹவுஸ்புல்-2' ரீமேக்கில் நடிக்க ஜீவா, விஷால், ஆர்யா விருப்பம்!!!

Wednesday, May 02, 2012
இந்தியில் ரிலீசான 'ஹவுஸ்புல் 2' படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இதில் அக்ஷயகுமார், ஜான்ஆபிரகாம், ரிதேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக அசின் நடித்துள்ளார்.

தமிழில் 2003-ல் ரிலீசான 'பந்தா பரமசிவம்' படத்தின் இந்தி ரீமேக்கே 'ஹவுஸ்புல்-2'. தமிழில் பிரபு நடித்து இருந்தார். டி.பி.கஜேந்திரன் இயக்கினார். பி.டி.செல்வகுமார் தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இப்படம் இந்தியில் தயாராகி வசூலை கொட்டுகிறது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஹவுஸ்புல்-2' படத்தை மீண்டும் தமிழில் மெகா பட்ஜெட்டில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் நடிக்க ஜீவா, ஆர்யா, விஷால் ஆகியோர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஜீவா கூறும்போது 'ஹவுஸ்புல்-2' படத்தை பார்த்ததும் அதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தமிழ் ரசிகர்கள் காமெடி படங்களை ரசிக்கிறார்கள் என்றார்.

Comments