கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?!!!

Saturday, May, 12, 2012
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது.

இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.

இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம்.

விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.

Comments