டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா? - மறுக்கிறார் நயன்தாரா!!!

Wednesday,May,16,2012
போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான்.

ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

"டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா.

பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது

Comments