பெட்ரூமுக்குள் என்னை அனுமதிப்பதில்லை : குழந்தையை 24 மணி நேரமும் கவனிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!!!

Saturday, May, 19, 2012
காலை முதல் 24 மணி நேரமும் குழந்தையை கவனிப்பதால் பெட் ரூமில் என்னை ஐஸ்வர்யாராய் அனுமதிப்பதில்லை என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியதாவது: குழந்தை ஆரத்யாவுடன் எப்போதும் பொழுதை கழிப்பேன். அவளுடன் விளையாடுவேன். உச்சா போய் டயபரை நனைத்துவிட்டால் அதை மாற்றுவேன். ஆனால், அதற்கு ஐஸ்வர்யா என்னை அனுமதிப்பதில்லை. நன்றாக தூங்கி கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று ஆரத்யா விழித்து கொண்டு ஆழ ஆரம்பித்து விடுவாள். உடனே எனக்கும் தூக்கம் கலைந்துவிடும். குழந்தையை கொஞ்ச ஆரம்பித்து விடுவேன். மறுபடியும் தூங்க செல்ல மாட்டேன். இதனால் மறு நாள் ஷூட்டிங் போவதற்கு தாமதமாகிவிடும். இதை ஐஸ்வர்யா விரும்பவில்லை.

மறுநாள் ஷூட்டிங் இருந்தால், என்னை குழந்தையுடன் தூங்க அனுமதிக்கமாட்டார். பெட்ரூமுக்கு வராதீர்கள், வேறு அறையில் தூங்குங்கள் என்று என்னை அனுப்பிவிடுவார். ஆரத்யாவுக்கு மே 16ம் தேதி 6 மாதம் நிறைவடைகிறது. இன்னும் கொஞ்சம் வளரும் வரை எனக்கு பெட்ரூமில் தூங்க அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன். ஐஸ்வர்யாவை பொறுத்த வரை அவரது காலைப்பொழுது குழந்தையுடன் தொடங்கி இரவுப் பொழுதும் குழந்தையுடனே முடிகிறது. மசாஜ் கொடுப்பது, குளிப்பாட்டுவதில் தொடங்கி நாள் முழுவதும் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். இப்போதெல்லாம் ஐஸ்வர்யாவின் கவனிப்புக்காக நான் கியூவில் காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.

Comments