இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த 'கஹானி' தமிழில் ரீமேக் ஆகிறது!!!

Thursday,May,31,2012
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற கஹானி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் என்டிமால் இன்டியா பிரைவேட் லிட் நிறுவனம், நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவன‌த்தோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

சுஜாய் கோஷ் எழுதி இயக்கிய கஹானியில் வித்யாபாலன் கதாநாயகியாக நடித்துள்ளார். பரம்பத்ரா சட்டர்ஜி மற்றும் நஸ்ருதின் சித்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது காணாமல் போன தனது கனவரை தேடும் பெண்ணாக வித்யாபாலன் நடித்துள்ளார். இந்த தேடலில் சாட்டர்ஜி மற்றும் சித்திக் உதவி செய்கின்றனர்.அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்த ப‌டம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

இந்த படத்தை தமிழில் இயக்குவதற்காக மூன்று முன்ணணி இயக்குனர்களோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இயக்குனர் மற்றும் கதாநாயகி பெயர் வெளியாகிறது.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தமிழில் நான் அவன் இல்லை,மிஷ்கினின் அஞ்சாதே, பாண்டி, தனுஷின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் தயாரித்துள்ளது.

Comments