Tuesday, ,May, 22, 2012
இயக்குநர் சிம்புதேவனுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதியன்று திருமணம் நடைபெறுகிறது. அவர் எம்.பி.ஏ பட்டதாரியான கல்யாணி எனபவரை மணக்கிறார்.
'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். முதன் முதலாக வடிவேலுவை ஹீரோவாக்கிய சிம்புதேவன், அப்படத்தின் மூலம் மாபெரும் வசூலை ஈட்டிய திரைப்பட இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' ஆகியப் படங்களை இயக்கினார்.
தற்போது தனுஷை வைத்து 'மாரீசன்' என்ற படத்தை இயக்கி வரும் சிம்புதேவன், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் சிம்புதேவனுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. கமுதியைச் சேர்ந்த கலைவாணி என்ற எம்.பி.ஏ பட்டதாரி பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் வரும் ஜுன் 1ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது.
மதுரையில் பிறந்து வளர்ந்த சிம்புதேவன் பிரபல வார இதழில் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றிப் பிறகு இயக்குநர் சேரனிடன் உதவி இயக்குநராகப் பனியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment