
யு.டிவி நிறுவனம் தமிழ் திரையுலகில் கால்பதித்து பிரம்மாண்ட படங்களை தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறது. யு.டிவி நிறுவனம் தயாரிப்பில் 'தாண்டவம்', 'முகமூடி', 'மசாலா கஃபே' என மூன்று படங்கள் உருவாகி வருகிறது. 'தெய்வத்திருமகள்' கூட்டணி இயக்குநர் விஜய் - விக்ரம் இணைந்து இருக்கும் 'தாண்டவம்' படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன. 'தாண்டவம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், யு.டிவி நிறுவனம் படத்தின் FIRST LOOKஐ வெளியிடவில்லை. 'தெய்வத்திருமகள்' படத்தின் FIRST LOOKஐ போலவே இதுவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யு.டிவி நிறுவனம் வெளியிட்ட 'தாண்டவம்' படத்தின் FIRST LOOK அமைந்து இருக்கிறது. 'தாண்டவம்' படத்தில் விக்ரம், ஜகபதி பாபு இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். படம் நெடுக போலீஸ் உடையில் நாயகன் வருவது போல அல்லாமல் வித்தியாசமாக கதைக்களம் அமைத்து இருக்கிறாராம் விஜய். 'தாண்டவம்' படத்தில் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், ஜகபதி பாபு, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
Comments
Post a Comment