என்னுடன் ஜோடி சேர ஹீரோயின்கள் மறுப்பதில்லை!!!

Sunday, April, 22, 2012
முன்புபோல் என்னுடன் ஜோடியாக நடிக்க ஹீரோயின்கள் மறுப்பதில்லை என்றார் கருணாஸ். கருணாஸ், ஹீரோவாக நடிக்கும் படம் ‘மச்சான். இது பற்றி அவர் கூறியதாவது: நான் நடிக்க வந்து 10 வருடம் ஆகிறது. இதுவரை விவேக்குடன் சேர்ந்து நடித்ததில்லை. கதையின் நாயகனாக நான் நடிக்கும் ‘மச்சான் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 25 வருடம் தமிழ் சினிமாவில் நடித்து ஜனங்களின் கலைஞன் என்ற பட்டப் பெயர் வாங்கி இருக்கும் விவேக் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதை பெரிய விஷயமாக கருதுகிறேன். அனிமல் அரசன் என்ற வேடம் ஏற்கிறார்.

நட்பை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இப்படத்தை எழுதி இயக்கும் ஷக்தி சிதம்பரம், லொள்ளு பாண்டி என்ற நையாண்டி வேடத்தில் நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அம்பாசமுத்திரம் அம்பானி, ‘திண்டுக்கல் சாரதிÕ படத்தில் ஹீரோவாக நான் நடித்தபோது ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்தனர். அந்தநிலை இப்போது மாறிவிட்டது. பல ஹீரோயின்கள் கால்ஷீட் தர முன்வருகிறார்கள். ‘மச்சான் படத்தில் ஷெரீல் பிரிண்டோ ஹீரோயின். குமர குருபரன், வி.மணி தயாரிப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசை

Comments