
ஆட்டிசம்நோய் மற்றும் மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடிகர், நடிகைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் சென்னையில் நடக்கிறது. லிமெரியன் ஓட்டலில் வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது.
பேஷன் ஷோவில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா, ஜீவா, மகத், சித்தார்த், நடிகைகள் டாப்சி, சோனியா அகர்வால், நர்கீஸ் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான மேடை '3டி' அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் துரை தயாநிதி மனைவி அனுஷா 'நெபர்தரி' என்ற அமைப்பை துவங்கி அதன்மூலம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
வசூலாகும் தொகையில் ஒருபங்கு மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனமான அரவிந்த் பவுண்டேஷனுக்கு வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment