ஜெயம் ரவிக்கு ஜோடி நயன்தாரா அல்ல... அமலா பால்!!!

Thursday, April, 26, 2012
முன்னணி நடிகை என்ற பெயர் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடாதவர் அமலா பால்.

இப்போது அந்தக் குறையும் தீர்ந்துவிடும் போலிருக்கிறது.

இவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவி!

ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்ற கூறப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் நிறுவனத்தினர்.

படத்தின் கதையைக் கேட்ட அமலாப் பால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படுவதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அமலா பால் நடித்து சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தாலும், அவர் தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் தந்துவந்தார்.

Comments