'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?! !!!: எல்லா நடிகைகளும் எனக்கு ஒன்றுதான்! - ஆர்யா!!!

Monday, April 02, 2012
இந்தியில் வரவேற்பைப் பெற்ற 'டெல்லி பெல்லி'யின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறது யுடிவி நிறுவனம். இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யு.டிவி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. 'டெல்லி பெல்லி' படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் கண்ணன். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்களை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். படத்தின் நாயகியாக ஹன்சிகாவை அணுகி இருக்கிறது யு.டிவி நிறுவனம். இது குறித்து ஹன்சிகா கூறியதாவது, "டெல்லி பெல்லி படத்தினை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். 'டெல்லி பெல்லி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க என்னை அணுகி இருக்கிறார்கள். விரைவில் ஒப்பந்தமாகி விடுவேன்" என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலிருந்து ஆர்யா, சந்தானம் காமெடி கூட்டணிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'டெல்லி பெல்லி'யில் ஹன்சிகா?!!!

ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக, அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும். 'வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்த அமலா பாலும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆர்யா தன் புது வீட்டில் தனது நண்பர்களுக்கும், CCL-ல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார். அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார். உடனே அமலா பாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது. இதற்கு அமலா பால், "ஆர்யாவுக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார். இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது, "என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது. எனக்கு அனைவருமே நண்பர்கள்தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்றுதான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும்", என்று தெரிவித்து இருக்கிறார். பாஸ்... நச் ஆளுயா நீர்ர்ர்...! ஃபிகர பிக்கப் பண்ணி ட்ராப் பண்றதெல்லாம் உமக்கு கைவந்த கலையாச்சே...!!

Comments