ராஜா போக்கி‌ரி ராஜா - மு‌ன்னோ‌ட்ட‌ம்!!!

Friday, April, 27, 2012
மலையாளத்தில் வெளிவந்த போக்கி‌ரிராஜாவை தமிழில் ராஜா போக்கி‌ரிராஜா என ஒரு ராஜா எக்ஸ்ட்ராவாக சேர்த்து வெளியிடுகிறார்கள். படத்தின் முக்கியமான அம்சம் மம்முட்டியும், பிருத்விராஜும் இணைந்து நடித்திருப்பது.

பிருத்விரா‌ஜின் காதலி ஸ்ரேயா. இவர்கள் காதலைப் பி‌ரிக்கும் கொட்டேஷன் ரவுடியான மம்முட்டிக்கு வருகிறது. அதேநேரம் தனது மகன் பிருத்வியை காப்பாற்றும்படி மம்முட்டியிடம் கோ‌ரிக்கை வைக்கிறார் நெடுமுடிவேணு. இங்கே ஒரு ட்விஸ்ட். நெடுமுடிவேணுவின் மகன்கள்தான் பிருத்வியும், மம்முட்டியும். அப்புறமென்ன... அண்ணன் தம்பியின் காதலுக்கு உதவுகிறார்.

விஷாக் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்சிகிப்ட் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் விவேகா. படத்தின் கதை, திரைக்கதை உதயகிருஷ்ணா, எடிட்டிங் மாதேஷ் நாராயணன். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி.

மலேசியா பாண்டியன் படத்தை வெளியிடுகிறார். வரும் 27 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Comments