'வைகை', 'கோரிப்பாளையம்' என்று ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சுவாஷிகா, தற்போது 'கண்டதும் காணததும்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்!!!
Wednesday,April,25,2012
'வைகை', 'கோரிப்பாளையம்' என்று ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சுவாஷிகா, தற்போது 'கண்டதும் காணததும்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பை பார்த்து இப்படத்தின் இயக்குநர் பாராட்டினாரோ இல்லையோ, படப்பிடிப்பில் இவர் கொடுத்த ஒத்தழைப்பை பார்த்து ரொம்பவே பாராட்டியிருக்கிறார்.
புதுமுக இயக்குநர் சீலன் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடன இயக்குநர் ஜான் பாபுவின் மகன் விகாஷ், ஹீரோவாகவும், சுவாஷிகா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ்.சங்கரநாராயணன், எஸ்.இந்து, இசையமைப்பாளர் வி.ஏ.சார்லி, ஒளிப்பதிவாளர் வின்ஷி பாஸ்கி என முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
திரையிடப்பட்ட பாடல்களும், அதை படமாக்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் ஒரு பாடலில் ஒளிப்பதிவாளர் வின்ஷி பாஸ்கி படமாக்கிய சில காட்சிகள் ஆஹா! என்று சொல்ல வைத்தது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சீலன், படத்தில் பங்குபெற்ற அனைவரையும் பாராட்டி பேச, ஹீரோயின் சுவாஷிகாவைப் பற்றி பேசும் போது, "சுவாஷிகா மிகச்சிறந்த நடிகையாக வருவார். எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எந்தவித இடையூறும் செய்யாமல் மிகச்சிறப்பாக நடித்து கொடுத்தார்." என்றார்.

Comments
Post a Comment