பஞ்சாலையில் சிகரெட் என்னத்துக்கு...?!!!

Wednesday,April,11,2012
இயக்குநர் தனபால் பத்மநாபன் இயக்கும் 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' படத்தில் சிகரெட் புகைக்கும் காட்சிக்கு சென்சார் 7 கட் கொடுத்துள்ளது. இதனால் 7 புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் கூறியுள்ளார். நடிகர்கள் ஹேமச்சந்திரன், நந்தனா நடித்துள்ள இப்படம், 1957 முதல் 90 வரையிலான கோவை, உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழு, 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. மேலும், சிகரெட் புகைக்கும் காட்சிகளுக்கு சென்சார் 7 கட் கொடுத்திருக்கிறார்கள். சிகரெட் பிடிப்பது பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சாதாரணமான விஷயம். அவைதான் காட்சியாக இடம் பெற்றிருந்தது. இருந்தாலும் கதையோட்டம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அந்த காட்சிகளை நீக்கி விட்டு சிகரெட் இல்லாத புதிய காட்சிகளை இணைத்துள்ளதாக இயக்குநர் பத்மநாபன் கூறுகிறார். இம்மாத இறுதியில் படம் வெளிவருகிறது.

Comments