Saturday, April, 07, 2012
சுந்தர் சி. யின் படங்களிலிருந்து காமெடியை மட்டும் தூக்கிவிட்டால் கலைஞர் தொலைக்காட்சியில் மெகா சீரியலாக வெளியிடலாம். அவரை காப்பாற்றுவதே காமெடியன்கள்தான். முன்பு கவுண்டமணி. பிறகு வடிவேலு.
ஈகோ தகராறில் வடிவேலு சுந்தர் சி.யை வம்படியாக விலக்கிய பிறகு விவேக்கை பயன்படுத்தினார் சுந்தர் சி. அதன் பிறகு பிடித்தது சனி. காமெடி என்ற பெயரில் விவேக் செய்த மிமிக்கிரியில் படங்கள் பப்படமாயின. விவேக் இல்லாதிருந்தால் படம் மேலும் நாலு நாள் ஓடியிருக்கும் என்றானது நிலைமை.
காமெடியன் இல்லாத கையறு நிலையில் மசாலா கஃபேயில் ஆப்டாக அமைந்தார் நற்தானம். கவுண்டமணியை நினைவுப்படுத்தும் இவரின் கவுண்டர் டயலாக்குகள் சுந்தர் சி. க்கு அட்டகாசமாக செட்டாக சந்தானத்தை தனது ஆஸ்தான காமெடியனாக அறிவித்திருக்கிறார். மசாலா கஃபே யின் முக்கிய அயிட்டமே இவர்தான். அஞ்சலியின் முறைமாமனாக வந்து இவர் தருகிற அலப்பறைக்கே படம் அம்பது நானை தாண்டிவிடும் என்கிறார்கள். படம் நெடுக இவர் அடிக்கும் பன்ச் டயலாக்குகள் வேறு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
எப்படியோ ஈகோ வடிவேலிடமிருந்தும், மிமிக்கிரி விவேக்கிடமிருந்தும் விடுதலை கிடைத்திருக்கிறது சுந்தர் சி. க்கு. வாழ்க சந்தானம்.

Comments
Post a Comment