விலை மாதர்களுக்கென ஸ்ரேயா தொடங்கும் புதிய சங்கம்!!!

Tuesday, April, 10, 2012
சென்னை::விபச்சாரத்தைத் தொழிலாக மேற்கொண்டுள்ள பெண்களுக்கென புதிய சங்கம் ஒன்றைத் தொடங்குகிறார் நடிகை ஸ்ரேயா.

விபச்சாரி வேடத்தில் நடிப்பது, விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக உதவுதல் போன்றவற்றில் நடிகைகள் அதிக நாட்டம் காட்டிவருகின்றனர். மும்பையில் இதனை பெரிய சமூகப் பணியாக சத்தமின்றி செய்து வருகின்றனர் பல முன்னணி நடிகைகள்.

இது தவிர்த்த சமூக நலப் பணிகள், பிராணிகள் பாதுகாப்பு போன்றவற்றிலும் நடிகைகள் அக்கறை காட்டுகின்றனர்.

ஸ்ரேயாவுக்கும் இந்த மாதிரி சேவைகளில் நாட்டம் அதிகம். ஏழைகளுக்கு விளம்பரம் இல்லாமல் உதவி வருகிறார். அத்துடன் ஆசிரமங்களுக்கு சென்று தியானம், யோகா போன்ற வற்றில் ஈடுபடுகிறார். கோவையில் ஒரு ஆசிரமத்துக்கு ரெகுலராகப் போய் வருவது ஸ்ரேயா வழக்கம்.

விபச்சாரத்தை தொழிலாகக் கொண்டு வாழும் பெண்களின் வாழ்க்கை போராட்டங்கள் ஸ்ரேயாவை மிகவும் பாதித்துவிட, வறுமையால் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சினிமா ஆசையால் இத்தொழிலில் தள்ளப்படும் பெண்கள் போன்றோருக்கு உதவ தனி அமைப்பை தொடங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

செக்ஸ் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு மூலம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்!

செம தில்லுமா!

Comments