நட்பான நடிகைக்கு வாய்ப்பு.. இயக்குனர் பிடிவாதம்..!!!

Monday, April, 09, 2012
சென்னை::மில்க் நடிகையோடு ரொம்ப நெருக்கமா பழகுறாரு மதராசபட்டின இயக்குனரு. பஞ்ச¢ நடிகரை வச்சு அடுத்த படம் இயக்குறாரு இயக்குனரு. அந்த படத்துல மில்க் நடிகையைத்தான் ஒப்பந்தம் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறாராம்... நிக்குறாராம்... ஆனா, நடிகர் தரப்புலேருந்து இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கலையாம். நடிகர் யாரை சொல்றாரோ அவர்தான் ஹீரோயின்னு தயாரிப்பு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

நமீயான நடிகைக்கு படங்களே இல்லை. ஆனா, சொந்த ஊர்ல நடத்துற பிசினஸ்ல நல்லா காசு பாக்குறாராம்... பாக்குறாராம்... அந்த பணத்தை கொண்டு, நிக்குற உங்க படங்களை வெளியிட முயற்சி பண்ணுங்கன்னு கூட இருக்கிறவங்க உசுப்பி விடுறாங்களாம்... விடுறாங்களாம்... அந்த படங்கள்ல நடிச்சதோடு என் வேலை முடிஞ்சுது. எனக்கும் அந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு நடிகை உஷாரா எஸ்கேப¢ ஆகுறாராம்... ஆகுறாராம்...

சமீபத்துல பர்த்டே பார்ட்டி கொண்டாடினாரு தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு. அப்போ மாஸ்டரோடு நெருக்கமா போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, பர்த்டே வாழ்த்து சொன்னாரு மூணுஷா நடிகை. வழக்கமா மாஸ்டர் பிறந்த நாளுக்கு போன்ல கூட மூணுஷா வாழ்த¢து சொல்ல மாட்டாராம்... மாட்டாராம்... ஆனா நயனம் பிரிஞ்சதும் நேரா சந்திச்சு வாழ்த்து சொன்னதோடு, மாஸ்டரு இந்தியில இயக்கப்போற அடுத்த படத்துல நடிக்க நடிகை சான்ஸ் கேட்டாராம்... கேட்டாராம்...

Comments