ராதிகா சுற்றிவளைப்பு : ஷூட்டிங்கில் பரபரப்பு!!!

Monday, April, 16, 2012
அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், ‘வெற்றிச்செல்வன்’. இதன் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. அப்போது திடீரென்று சிலர் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதுபற்றி படத்தின் இயக்குனர் ருத்ரனிடம் கேட்டபோது கூறியதாவது: சம்பவம் உண்மைதான். காஷ்மீரில் இருந்து தெகல்காம் செல்லும் வழியில் மலர்த்தோட்டம் ஒன்றில் ராதிகா ஆப்தே நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த பகுதியில் கடந்த சில வருடங்களாக ஷூட்டிங் நடக்கவில்லையாம். இதனால் வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடியது. திடீரென்று வந்த சிலர், ‘நாங்கள் காஷ்மீரிகள். நீங்கள் எப்படி இங்கு ஷூட்டிங் நடத்தலாம்’ என்று கேட்டு ராதிகா ஆப்தேவை சுற்றிவளைத்து கெரோ செய்தனர். இதில் அவர் நடுங்கி விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு லோக்கல் புரொடக்ஷன் மானேஜர் ஒருவர், சமாதானம் பேசியும் கேட்காததால் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டி வந்தது. இதையடுத்து வேறொரு இடத்தில் ஷூட்டிங் நடத்திவிட்டு திரும்பினோம்.

Comments