ஆதியின் உயரத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி: கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!!!

Saturday, April, 28, 2012
ஆதியின் உயரத்தை ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி: கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தின் 'கோச்சடையான்' படத்தின் சூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினி, மீண்டும் கோச்சடையான் படம் மூலம் தன்னுடைய பழைய வேகத்தில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தின் ஷூட்டிங் போது தன்னுடன் நடித்த ஆதியின் (ஈரம் படத்தின் ஹீரோ) உயரத்தை ரசித்த ரஜினி அவரிடம் உங்கள் உயரம் என்ன என்று விசாரிக்க 6 அடி 2 இன்ச் என்றதும் வெரிகுட் என்று பாராட்டினாராம்...

கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி!

ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இப்படத்தில் நடிப்பது குறித்து ஆதி கூறியதாவது:-

ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு இதன் மூலம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கேரக்டரில் ஒன்றி நடித்தேன். அதே நேரம் சவாலாகவும் இருந்தது. ரஜினியை சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது. நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணங்களாக அமைந்தது.

என்று கூறினார்.

Comments