நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன் : சிம்பு திடீர் முடிவு!!!

Thursday, April 05, 2012
நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன் என்று திடீரென அறிவித்திருக்கிறார் சிம்பு.
‘வல்லவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது முதலே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் காதல் மலர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ‘வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர். சுமார் 2 வருடத்துக்கும் மேலாக இவர்கள் காதல் தொடர்ந்து. தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் நுழையலாம் என்ற எண்ணத்துடன் இருந்த நயன்தாரா படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார். ஆனால் பிரபுதேவாவுடனான காதல் தோல்வி அடைந்ததையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொன்னதாகவும் அடுத்தடுத்து தனது படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடிப்பார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்திருக்கிறார் சிம்பு. இது பற்றி சிம்பு கூறும்போது, ‘நயன்தாரா நான் நடிக்கும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி அவருடன் என்னை இணைத்து வேண்டாம். அவருடன் எந்த படத்திலும் நான் நடிக்கப்போவதில்லை என்றார்.

Comments