நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சரமாரி புகார்!!!

Monday, April 02, 2012
பெங்களூர் :கன்னட பட அதிபர்கள், நடிகர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. காண்டம் தவிர நடிகர்கள் எல்லாவற்றையும் கேட்பதாக தயாரிப்பாளர் கூறினார். கன்னட பட தயாரிப்பாளர் முனிரத்னா. நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகர்களை விமர்சித்தார். ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டால் அவர்கள் தயாரிப்பாளர்களிடம் சாப்பாடு முதல் போக்குவரத்து செலவு உள்ளிட்ட எல்லாவற்றையுமே கேட்கின்றனர். காண்டம் மட்டும்தான் அவர்கள் கேட்பதில்லை என்றார். இது நடிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கன்னட ஹீரோ யோகி கூறும்போது, எந்த தயாரிப்பாளரிடமும் நானாக சென்று வாய்ப்பு கேட்கவில்லை. அவர்கள்தான் என் வீடு தேடி வந்து கால்ஷீட் கேட்கிறார்கள். என்னை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எனது நண்பர்கள் வந்தால் அவர்களுக்கான சாப்பாடு பில் நானேதான் செலுத்துகிறேன்.

ஆரம்ப காலங்களில் அவுட்டோர் ஷூட்டிங் சென்றால் தின வாடகை ரூ.150 மட்டுமே உள்ள அறையில்தான் தங்குவேன். இப்போது நான் கேட்காவிட்டாலும் நல்ல ஓட்டல்களில் தங்க வைக்கின்றனர். முனிரத்னத்தின் கருத்து எல்லா நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விமர்சித்ததாக கருதவில்லை என்றார். யோகியின் இந்த பதில் மற்றொரு சர்ச்சையை கிளப்பிவிட்டது. தயாரிப்பாளர்கள் அவர்வீடு தேடி கால்ஷீட் கேட்கிறார்கள் என்கிறார். எல்லோரையும் பிச்சைக்காரர்கள் என்று குறிப்பிடுகிறாரா? அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். பின்னர் யோகி கூறும்போது, தயாரிப்பாளர்கள் நினைப்பதுபோல் தவறான கருத்தை தெரிவிக்கவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை என்றார். இந்த மோதலால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments