
அஜித் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் 'பில்லா 2' படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்போ ஏராளம். 'பில்லா 2' படத்தினை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. 'பில்லா 2' படத்தின் பிரத்யேக படங்களை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை, எந்த ஒரு அஜித் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி நிறுவனம். இப்படத்தின் இசையை இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தில் 6 பாடல்களுடன் ஒரு ப்ரொமோ பாடலும் இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் TEASER ஏப்ரல் 13-ம் தேதி இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இணையத்தில் நேற்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட TEASER அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக TEASER-ல் அஜித் பேசும் "என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா" என்று வசனம் வரவேற்பை பெற்று இருக்கிறது. மே 1 அஜித் பிறந்த நாள் அன்று தியேட்டரில் 'பில்லா 2' படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment