
ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.
நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.
Comments
Post a Comment