பாலிவுட்டில், இசையில் கொடிகட்டி பறந்தவர்: தமிழ்படத்திற்கு பாட்டு பாடிய பிரபல இந்தி இசையமைப்பாளர்!!!

பாலிவுட்டில், இசையில் கொடிகட்டி பறந்தவர் பாப்பி லஹரி. ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அவர் முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பாட்டு பாடியிருக்கிறார். பாப்பி லஹரிக்கு பாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பு குறைந்தாலும், தொடர்ந்து ஆல்பம் மற்றும் பாடல்களை பாடி வருகிறார். சமீபத்தில் வித்யாபாலன் நடிப்பில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளிவந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், ஊலலா... என்ற பாடல் செம வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் முதன்முறையாக தமிழ் படம் ஒன்றுக்கு பாடியிருக்கிறார். பிரபுராஜ சோழன் இயக்கத்தில், அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் கருப்பம்பட்டி என்ற படத்தில், நாட்டி ராஜா ராஜா.. என்ற பாடலை பாப்பி லஹரி பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்காக அவருக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்துள்ளனர். தமிழ்படம் புகழ் கண்ணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பாட்டும் நன்றாக வந்திருப்பதாக டைரக்டர் பிரபுராஜா சோழன் கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment