கடும் போட்டியில் த்ரி-நயன்!!!

Sunday, April, 22, 2012
நாயகர்களுக்கு இடையே போட்டி நடப்பது போலவே நாயகிகளுக்கு இடையே போட்டி துவங்கி இருக்கிறது. த்ரிஷா - நயன்தாரா இடையே தற்போது கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... விஜய் நடித்த 'குருவி' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. ஆனால் அப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வெளியானது. அப்போது தான் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஆரம்பமானது. நயன்தாரா - பிரபுதேவா இடையேயான காதல் பிரிவிற்கு பிறகு பிரபுதேவா அளித்த விருந்து ஒன்றில் பிரபுதேவாவுடன் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது. சில மாதங்களாக திரைப்பட நடிப்பை நிறுத்தியிருந்த நயன்தாரா, தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. முதலில் கோபிசந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானவர், அடுத்ததாக ராணா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராணா - த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் கதை என்ன என்று கேட்காமல் உடனே ஒகே என்று கூறிவிட்டாராம் நயன். த்ரிஷா ஒப்பந்தமாகி இருந்த ஒரு விளம்பரத்திற்கு தற்போது நயன் ஒப்பந்தமாகி இருக்கிறார். யம்மாடியோவ்! குடும்பிய பிடிக்காம விட்டாங்களே.....

Comments