Saturday, April, 21, 2012
'3' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், தனது அடுத்த படப்பணிகள் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் தனுஷ். '3' படத்தின் இந்தி பணிகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்படம் இந்தியில் வெளியாக இருக்கிறது. '3' படத்தினை தொடர்ந்து தனுஷ் 'ராஜன்ஹா' என்னும் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற இருக்கிறது. தமிழில் பரத்பாலா இயக்க இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படம் குறித்து, பிறகு எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தனுஷ் டிவிட்டரில், "தமிழில் எனது அடுத்த படத்திற்கு 'மரியான்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. 'வந்தே மாதரம்' ஆல்பத்தினை இயக்கிய பரத்பாலா இப்படத்தினை இயக்க இருக்கிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்" என்று தெரிவித்து இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்க இருப்பது குறித்து "வெற்றிமாறன் உடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. வெற்றிமாறன் இப்போது தான் கதையை தயார் செய்து வருகிறார். அவரது கதையை கேட்க ஆர்வமாக இருக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

Comments
Post a Comment