கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday, April, 28, 2012
* இங்கிலாந்தில் இருந்து தமிழ் படத்தில் இடம்பிடித்த எமி ஜாக்ஸன் தற்போது பாலிவுட், டோலிவுட் படங்களில் நடிப்பதுடன் இந்திய சோப்பு நிறுவனம் ஒன்றிற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

* சசிகுமார் நடிக்கும் ‘சவுந்திரபாண்டியன்’ படத்தை அவரது உதவியாளர் பிரபாகரன் இயக்குகிறார். ‘கும்கி’ படத்தில் நடிக்கும் லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார்.

* இளையராஜா தலைமையில் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தும் பவதாரணி அடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளார்.

* சினிமாவில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது தெலுங்கு படமொன்றில் அல்லாரி நரேஷின் அத்தையாக நடிக்கிறார். இதற்காக பெரிய சம்பளம் வாங்கி இருக்கிறாராம் ரம்யா.

* ‘கோச்சடையான்’ படத்தில் தன்னுடன் நடித்த ஆதியின் உயரத்தை ரசித்த ரஜினி அவரிடம் உங்கள் உயரம் என்ன என்று விசாரிக்க 6 அடி 2 இன்ச் என்றதும் வெரிகுட் என்று பாராட்டினார்.

* ஏற்கனவே 30 பாடல்கள் சொந்த குரலில் பாடி இருக்கும் மோகன்லால் அடுத்து ஜோஷி இயக்கும் ரன் பேபி ரன் என்ற படத்துக்கு சொந்த குரலில் பாடுகிறார்.

* விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா தம்பி சத்யா ஜோடியாக நடிக்கிறார் ‘யுவன்’ பட ஹீரோயின் ரகுல் பிரீத் சிங்.

* ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படம் 65வது கேன்ஸ் சர்வதேச பட விழாவில் திரையிடப்படுகிறது.

Comments