அஜித்தின் பாராட்டை பெற்ற விக்ரம் பிரபு...!!!

Monday, April, 09, 2012
சென்னை::நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு “கும்கி” படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.

இப்படம் லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. ”மைனா” படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், ”கும்கி” படத்திற்காக விக்ரம் பிரபு பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளார். அக்காட்சிகளில் நடிப்பதற்காக நிறைய கஷ்டங்களை பட்டிருக்க்கிறார். இந்த விஷயம் ”தல” அஜித் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதையடுத்து, விக்ரம் பிரபுவுக்கு போன் போட்டு பாராட்டி தள்ளியிருக்கிறார் அஜித். இந்த பாராட்டால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு.

Comments