Wednesday,April,11,2012
கதை மாறியதால் மலையாள படத்திலிருந்து நீக்கப்பட்டார் பத்மப்ரியா. ‘பொக்கிஷம்Õ, ‘பழஸிராஜாÕ உள்பட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. இவர் மலையாள இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்க அனூப் ஹீரோவாக நடிக்கும் ‘திருவனந்தபுரம் லாட்ஜ்Õ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதேபடத்தில் மேக்னா ராஜும் நடிக்க தேர்வானார். தற்போது இதிலிருந்து பத்மப்ரியா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘திருவனந்தபுரம் லாட்ஜ் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக முடியாத நிலையில் என்னை அப்படத்தில் நடிக்க கேட்டார் இயக்குனர் பிரகாஷ். இந்நிலையில் அந்த ஸ்கிரிப்ட் முழுமை பெற்றது. ஸ்கிரிப்டின் ஆரம்பகட்டத்தில் எனது கதாபாத்திரம் அதிகமாக இருந்தது. முழுமையாக முடிவடைந்தபோது என் பாத்திரத்தின் காட்சிகள் மிகவும் குறைந்துவிட்டன. இதை வெளிப்படையாக என்னிடம் இயக்குனர் கூறினார். அவரது நேர்மை எனக்கு பிடித்திருந்தது. கால்ஷீட் வாங்கிவிட்டோம். இனி எந்த வேடம் கொடுக்கிறோமோ அதை நடித்துவிட்டு போகட்டும் என்று ஒரு சிலர் பெயருக்கு இரண்டு மூன்று சீன்களை எடுத்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். படம் பார்க்கும்போது மனதுக்கு வருத்தம் ஏற்படும். அந்தநிலை ஏற்படாமல் ஆரம்பத்திலேயே விவரம் கூறியதையடுத்து அப்படத்திலிருந்து விலகிவிட்டேன். இதனால் இயக்குனர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லைÕ என்றார்.

Comments
Post a Comment