நிராகரிக்கப்பட்ட ரஜினியின் கோரிக்கை! ஏமாற்றத்தில் ரஜினி!!!

Sunday, April 29, 2012
கோச்சடையான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் சில கவலைகள் இருக்கின்றதாம். அந்த கவலைகள் தன் மகள் சௌந்தர்யா பற்றியது தான்.

இதற்கு முன் சௌந்தர்யா சுல்தான், கோவா ஆகிய படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிய போது ஏற்பட்ட பணப்பிரச்சினையை ரஜினி தலையிட்டு தீர்த்து வைத்தார். இப்போது மறுபடியும் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை எராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா தயாரிக்கிறார்.

ஒருவேளை படத்தினால் நஷ்டமடைந்தால் தானே இழப்பீடு தரப்போகிறார்கள், அப்போது கூட எவ்வளவு நஷ்டம் வந்துவிடப் போகிறது என்று கேட்டால், சங்கதி அதுவல்ல என்கிறது சினிமா வட்டாரம். கோவா படத்திற்காக ரஜினி இழப்பீடு கொடுத்ததால் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடு செய்வார் என்ற பேச்சு எழுந்தது.

இப்போது மீண்டும் சௌந்தர்யாவிற்காக பணம் கொடுத்தால் பழையபடி பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதால், கோச்சடையான் ஷூட்டிங்கிற்காக கேரளா செல்வதற்கு முன் ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு ஒரு விசிட் அடித்தார் ரஜினி.

ரஜினி எப்போது நினைத்தாலும் ஏ.வி.எம் சரவணனை பார்க்கலாம். ரஜினிக்காக ஏ.வி.எம்மின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஏ.வி.எம் சரவணனை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சந்தித்த ரஜினி கோச்சடையான் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

சிறிது நேரம் யோசித்த சரவணன் ரஜினியிடம் “ தமிழ் சினிமா முன்பு போல் இல்லை ரஜினி. சூழ்நிலை நன்றாக இல்லை. படம் தயாரிக்கும் நிலையில் நானும் இல்லை. உனக்கு உதவ முடியாத நிலையில் நான் இருக்கிறேன் மன்னித்துக் கொள்” என்று கூறினாராம்.

அதன் பிறகு ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டிருக்கிறார். ரஜினி இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்ற பதட்டத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Comments