சந்தானம்- முதல்ல டான்ஸு... அப்புறம் முழு பாட்டு... அடுத்து ஹீரோ?:!!!

Wednesday,April,11,2012
சந்தானத்தின் வளர்ச்சி அபாரமானது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தானம், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்குப் பின் நட்சத்திர அந்தஸ்தை எட்டினார்.

இடையில் அறைஎண் 305-ல் கடவுள் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக வந்தார். ஆனால் படம் படுத்துவிட்டது.

ஆனாலும், கவுண்டமணி ஸ்டைல் காமெடிக்கு இருந்த மவுசு, வடிவேலு இல்லாத இடைவெளி போன்ற காரணங்களால் இன்று அவர் காட்டில் மழை.

இப்போது பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது ஒரு கல் ஒரு கண்ணாடிதான். கிட்டத்தட்ட சந்தானம்தான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையைத் தாண்டிய பாத்திரமாம் அது.

இதற்கு முன் பாடல் காட்சிகளில் பெயருக்கு தலை காட்டிய சந்தானம், இந்த ஓகேஓகேயில் ஒரு முழுபாடலுக்கும் நடனம் ஆடியுள்ளாராம். வாடா மச்சான் என்று தொடங்கும் இந்தப் பாடல் சந்தானத்துக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.

பெரிய வாய்ப்பு என்றால்... ஹீரோதானே!

Comments