
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ 1981-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் விஜயகாந்த் பூர்ணிமா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை தற்போது ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்க மட்டுமே உள்ளார். அவருடைய உதவி இயக்குனரான ரமேஷ் இயக்குகிறார்.
பிரபல நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்திற்காக இரு நாயகிகளை தேர்வு செய்துள்ளனர்.
அதில், ‘கோ’ படத்தில் நடித்த கார்த்திகா ஒரு நாயகியாகவும், ‘கோவா’ ‘கோ’ படங்களில் நடித்த ‘பியா’ மற்றொரு நாயகியாகவும் தேர்வாகியுள்ளனர். இருவரும் ‘கோ’ படத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் நாயகன், நாயகி, கதாபாத்திரங்களின் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்புகளை துவங்க இருக்கின்றனர்.
Comments
Post a Comment