பிரபுதேவா பார்ட்டியில் விஜய், த்ரிஷா!!!

Thursday, April 05, 2012
பெண்களுடனான உறவை துண்டிக்கும் போதெல்லாம் மனம் நெகிழும் வகையில் சொல்லும் வசனங்களை இந்தமுறையும் பிரபுதேவா வாசித்திருக்கிறார். பேசியிருக்கிறார் என்பது அபத்தம். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்... நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... யாரையும் குற்றம் சொல்லவில்லை.... நான் தனியாகவே இருக்கிறேன்... ஆ, காது வலிக்குது.

நயன்தாராவுடன் வெற்றிகரமாகப் பிரிந்ததையொட்டி தனது நலம்விரும்பிகளுக்கு பிரமாண்ட பார்ட்டி அளித்தார் பிரபுதேவா. இந்தப் பார்ட்டியில் விவிஐபிகளுக்கு மட்டுமே அழைப்பு. இரண்டாம்கட்ட நடிகர்களுக்குகூட கதவடைப்புதான். பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலைப் படித்தால் நடன இயக்குனரின் பவர் தெரியும்.

விஜய், த்ரிஷா, விஷால், ஜெயம் ரவி, சூர்யா, இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி... பரம ரகசியமாக நடந்த இந்தப் பார்ட்டியை உலகம் முழுவதும் தெரியப்படுத்திய பெயருமை திடீர் அரசியல்வாதி குஷ்புவை சாரும். கணவர் சுந்தர் சி.யுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட இவர் ஆஹா இதல்லவா பார்ட்டி என்று இணையத்தில் பூரித்ததில் பூலோகம் முழுக்க பார்ட்டி பிரபலமாகிவிட்டது.

அரசியல்வாதி அரசியல்வாதிதான்.

Comments