ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நானே - ஜாக்கி ஷெராப்!!!

Thursday, April, 26, 2012
ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நான்தான். அதை கோச்சடையானில் நீங்கள் பார்க்கலாம், என்கிறார் நடிகர் ஜாக்கி ஷெராப்.

ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானில் அவருடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. தீபிகா படுகோன், ருக்மணி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஆதி இவர்களுடன் ஜாக்கி ஷெராபும் நடிக்கிறார்.

இவர்தான் படத்தில் ரஜினிக்கு பிரதான வில்லன்.

இதுகுறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "ரஜினி என் நெருங்கிய நண்பர். அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மிகச் சிறந்த நடிகர் ரஜினி. அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது.

கோச்சடையான் படத்தில் என் பெயர் ராஜா. ஆனால் முழுக்க முழுக்க பக்கா வில்லன் வேடம். நானும் ரஜினியும் மோதும் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டுவிட்டன. அவருக்குப் பொருத்தமான வில்லன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், படம் வந்ததும். இதற்கு மேல் சொல்ல முடியாது," என்றார்.

Comments