
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், ‘நீதானே என் பொன்வசந்தம்‘. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தமிழில் ஜீவாவும் தெலுங்கில் நானியும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘’இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ மற்றும் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
Comments
Post a Comment