த்ரிஷா, தமன்னா கால்ஷீட் வாங்க முடியவில்லை!!!

Wednesday,April,11,2012
த்ரிஷா, தமன்னா கால்ஷீட் வாங்க முடியாததால் புது ஹீரோயினை நடிக்க வைத்தேன் என்றார் இயக்குனர். Ôஎனக்கு 20 உனக்கு 18Õ, ÔகேடிÕ ஆகிய படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. இப்படங்களில் த்ரிஷாவும், தமன்னாவும் நடித்திருந்தனர். ÔகேடிÕ, தமன்னா அறிமுகமான படம். பின்னர் இருவருமே முன்னணி இடத்தை பிடித்தனர். இந்நிலையில் ‘ஊ ல ல லாÕ என்ற படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹீரோவாக நடித்தார். விரைவில் திரைக்கு வருகிறது. இதுபற்றி ஜோதி கிருஷ்ணா கூறியது: ஊர்வசி லதா லலிதா லாவண்யா என்ற பெயர்களின் முதல் எழுத்தை வைத்துத்தான் இப்படத்துக்கு ஊ ல ல லா என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் நடிக்க த்ரிஷா, தமன்னாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதையடுத்து ப்ரீத்தி பண்டாரி ஹீரோயினாக தேர்வானார். இப்படத்தை இயக்கி நானே ஹீரோவாக நடிக்கிறேன். இருவேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வது கடினம். இப்படம் முடிய வருடக் கணக்கில் ஆனதற்கு என்ன காரணம் என்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங்கில் நடித்தபோது முட்டியில் அடிபட்டு ஜவ்வு கிழிந்துவிட்டது. 6 மாதம் படுக்கையில் இருந்து சிகிச்சை எடுத்தேன். இப்போது படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

Comments