தெலுங்கு படத்தில் கலாட்டா : தமன்னா நீக்கம்; காஜல் ஒப்பந்தம்!!!

Saturday, April, 14, 2012
தமன்னா நடிக்க இருந்த படத்திலிருந்து திடீரென அவர் நீக்கப்பட்டு, காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டில் ஹீரோயின்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சில ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படும் படத்தில் திடீரென்று வேறு ஹீரோயின் ஒப்பந்தம் ஆகிவிடுகிறார். சமீபகாலமாக பல படங்களில் இது நடந்து வருகிறது. டோலிவுட்டில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. முன்னணி நடிகைகள் பெயர் அடிபட்டுவந்தது. தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு, திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் தமன்னா ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுபற்றி காஜல் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது உற்சாகத்தை அளிக்கிறது. ஏற்கனவே சுகுமார், மகேஷ் பாபு கூட்டணியில் நடித்திருக்கிறேன். இப்படம் சற்று ஸ்பெஷல். வழக்கமான கதாபாத்திரம் கிடையாது. இப்படத்தில் மற்ற ஹீரோயின்களுக்கும் வாய்ப்பு சென்றது பற்றி கேட்கிறார்கள். ஆனால் அதுபற்றி என்னால் யூகிக்க முடியவில்லை. சில வாரங்கள் வெளிநாடுகளில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். பிறகு இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இதிலேயே பிஸியாக இருந்துவிட்டதால் வேறு எது பற்றியும் எனக்கு தெரியாது. எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது ஒப்புக்கொண்டேன். தமிழ், இந்தி படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Comments