கௌதம் எனக்கு எப்போதும் நன்மைதான் செய்வார்: சமந்தா!!!

Thursday, April, 26, 2012
எனக்கு எல்லாமே கௌதம் மேனன்தான்' என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குநர் கௌதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தை கௌதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் 3 மொழியிலும் ஹீரோயின் சமந்தாதான். இதுபற்றி சமந்தா கூறியதாவது: இப்போதைக்கு இந்தி படம் எதிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனாலும் கௌதம் மேனன் இயக்கும் இந்தி உள்ளிட்ட 3 மொழி படத்தில் நடிக்கிறேன். 3 மொழியிலும் ஒரே ஹீரோயின் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ஒப்புக்கொண்டேன். அவரது கணிப்பை மதிக்கிறேன். எப்போதுமே அவர் எனக்கு நன்மைதான் செய்வார். அவர் என் குரு. எனக்கு எல்லாமும் அவர்தான். மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் என்ன வேடம் என்கிறார்கள். அது மிகவும் ரகசியம். இப்போதைக்கு அதுபற்றி சொல்லமாட்டேன். இந்த வருடம் எனக்கு சுமார் 8 படங்கள் ரிலீஸ் ஆகும் என்ற எண்ணுகிறேன். இதற்காக கடினமாக உழைக்கிறேன் என்றார்.

Comments