சிம்புடன் நடிக்க நயன்தாரா நிபந்தனை!!!

Thursday, April 05, 2012
சினிமாவில் தென்னிந்திய மொழி படங்களில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகி நயன்தாரா. புகழின் உச்சத்தில் இருந்த அவர் பிரபுதேவாவுடன் காதல் வசப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தார். இதற்காக பிரபுதேவாவும் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

ஆனால் மனைவி-குழந்தைகளை அவரால் நிரந்தரமாக பிரிய முடியவில்லை. ரகசியமாக குழந்தைகளை சந்தித்தார். இதை அறிந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் உறவை துண்டித்துக் கொண்டார். பிரபுதேவாவை மணப்பதற்காக புதுப்படங்களில் நயன்தாரா நடிக்காமல் இருந்தார். கடைசியாக தெலுங்கில் ராமராஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.

காதல் முறிவால் மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்து இருக்கிறார். இதை அறிந்த தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் பலர் நயன்தாராவை அணுகி தங்களது படங்களில் நடிக்க முயற்சி செய்தனர். ஆனால் நயன்தாரா ஒப்புக் கொள்ளவில்லை. சிறந்த பெரிய பேனர் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். சிம்புவுடன் ஏற்கனவே வல்லவன் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல்-மோதல் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் பிறகு சிம்புவுடன், நயன்தாரா ஜோடி சேரவில்லை.

இப்போது மீண்டும் சிம்புவுடன் நடிக்க அழைப்பு வந்திருப்பதால் நயன்தாரா 3 நிபந்தனைகள் விதித்து இருக்கிறார். தனக்கு சம்பளமாக மிகப் பெரிய தொகை வேண்டும் என்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னுடன் நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ கூடாது, எனது கேரவனுக்கும் (சொகுசு ஓய்வு வேன்) சிம்பு வரக்கூடாது என்றும் நயன்தாரா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் இந்த நிபந்தனை புத்திசாலித்தனமானதா? அல்லது சிம்புவுடன் நடிப்பதை தவிர்ப்பதற்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments