பாரதிராஜா படத்தில் இருந்து நடிகை இனியா நீக்கம்!!!

Friday, April, 06, 2012
சென்னை::இயக்குனர் பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் அமீர் நாயகனாகவும், கார்த்திகா, இனியா ஆகியோர் நாயகிகளாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமீரும் இனியாவும் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திகாவையும் இன்னொரு நாயகனாக லட்சுமணனையும் வைத்து படப்பிடிப்பை பாரதிராஜா நடத்தி வருகிறார். படத்தில் இருந்து நீக்கியது குறித்து இனியா கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு மற்றும் பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தால் அன்னக்கொடியும், கொடிவீரனும் படப்பிடிப்புக்கு தடங்கல்கள் ஏற்பட்டன. பாரதிராஜாவால் அமீர், கார்த்திகா லட்சுமணன் மற்றும் என்னிடம் இருந்து சேர்ந்தார் போல் கால்ஷீட் பெறுவது கஷ்டமாக இருந்தது.

எனவே அதில் நடிக்க முடியவில்லை. அடுத்த படத்தில் என்னை நடிக்க வைப்பதாக பாரதிராஜா உறுதி அளித்துள்ளார். என்னை, நீக்கியதால் நான் வருத்தப்படவில்லை. அவரது அடுத்த படத்தில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments