
புவியரசி சினி பிளானர் வழங்கும் ராஜ்மென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தினர், இந்தியில் புதுமுகங்கள் நடித்து வெற்றி பெற்ற 'குல்லு தாதா' என்ற படத்தை தமிழில் 'லொல்லு தாதா பராக் பராக்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் ஹீரோவாக மன்சூரலிகான் நடிக்கிறார். ஹீரோயினாக ஷில்பா நடிக்கிறார்.
இப்படத்தில் மன்சூரலிகான் ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்திற்கு இசையமைத்து, பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடியாக பணம் வசூலிக்கும் மன்சூரலிகான், "நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன். ஒழுங்கா பணம் கட்டினா ஒஸ்தியா வாழ்வே...இல்லாட்டி நாஸ்தியா போயிடுவே" என்று அடிக்கடி உச்சரித்துகொண்டு கந்துவட்டி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி, போண்டாமணி, வெங்கல் ராவ், வெ.ஆ.மூர்த்தி, நெல்லை சிவா, பாண்டு உள்ளிட்ட பெரிய காமெடி பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வியாசன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ரவிசீனிவாஸ், நடனம் விஜயலட்சுமி, வாசு, சண்டைப்பயிற்சி நித்யானந்தம், தயாரிப்பு நிர்வாகம் ஷெரீப் அகமது.
இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர், ஏலகிரி போன்ற படங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
Comments
Post a Comment