இயக்குனர் தயாரிப்பாளர் மோதல் : மல்லிகா ஷெராவத் குத்து பாட்டு தேவையா?.!!!

Sunday, April 15, 2012
த்ரில்லர் கதையில் மல்லிகா ஷெராவத் குத்துபாட்டு தேவையா? இல்லையா என்பதில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்ஷன். தற்போது ‘தேஸ் என்ற இந்தி படம் இயக்குகிறார். ரத்தன் ஜெயின் தயாரிக்கிறார். இதில் மல்லிகா ஷெராவத்தின் குத்துப்பாடல் வைக்கும்படி தயாரிப்பாளர் கூறினார். ஆனால் பிரியதர்ஷன் மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஒருவரை வைத்து மல்லிகாவின் குத்துப்பாடலை தயாரிப்பாளர் படமாக்கி அதை படத்தில் இணைத்திருக்கிறார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரியதர்ஷன் கூறியது: ‘தேஸ் படத்துக்கு ஒருபோதும் குத்துப்பாட்டு தேவைப்படாது. ஆனால் தயாரிப்பாளரோ, ‘நாங்கள் இசை கம்பெனி நடத்துகி றோம். எங்கள் படத்தில் இதுபோல் பாடலை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக குத்துப்பாட்டு வேண்டும் என்றார். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். இந்நிலையில் என்னை அழைக்காமல் அவராகவே மல்லிகா ஷெராவத்தை வைத்து குத்து பாடலை படமாக்கி இருக்கிறார். இந்த பாடலை இணைப்பதற்கான காட்சி ஸ்கிரிப்ட்டில் கிடையாது. இது இசை சம்பந்தப்பட்ட கதை இல்லை. ஆக்ஷன் படம். ஆனால் பட புரமோஷனுக்காக இப்பாடலை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இதுவரை நான் த்ரில்லர் படம் இயக்கியதில்லை. அப்படி இயக்கினால் அது ஹாலிவுட் பாணியில் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தேன். தற்போது எடுக்கப்பட்டுள்ள மல்லிகா ஷெராவத்தின் பாடலை எங்குகொண்டு போய் நுழைக்கப்போகிறார்கள்.. அது ஸ்கிரிப்டை எப்படி பாதிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. இவ்வாறு பிரியதர்ஷன் கூறினார்.

Comments