
இளைஞர்கள் மத்தியில் யுவனின் இசையமைப்பில் வரும் பாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கும். இசையமைப்பாளராக மட்டுமல்லாது தற்போது தயாரிப்பாளராகவும் பரிணமிக்க இருக்கிறார் யுவன் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்கள் முன்னர், செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் மூவரும் இணைந்து 'White Elpehants' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்கினார்கள். பின்னர் பல்வேறு காரணங்களால் படம் எதுவும் தயாரிக்க முடியாமல் போய்விட்டது. சமீபத்தில் 'மங்காத்தா' கூட்டணியான அஜித் - வெங்கட்பிரபு மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். இத்தகவலை வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வெங்கட்பிரபு படம் என்றாலே அப்படத்திற்கு இசை யுவன் தான். அஜித் - வெங்கட்பிரபு இணையும் புதுப்படத்தை யுவன் தயாரிக்க இருக்கிறாராம். அஜித் - வெங்கட்பிரபு இருவருமே தங்களது தற்போதைய படப் பணிகளை முடித்த பின் அந்த புதுப்படத்தில் இணைய இருக்கிறார்கள்.
Comments
Post a Comment