கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘ரகளைபுரம்!!!

Sunday, April, 08, 2012
சென்னை::காமெடி நடிகர்களில் ரொம்பவே புத்திசாலித்தனமானவர் என்றால் கருணாஸை சொல்லலாம். முகம் சுளிக்க வைக்காத சுத்தமான பொழுதுபோக்குப் படங்களைத் தரவேண்டும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வரும் கருணாஸ், அதற்கு தன்னாலான முயற்சியையும் செய்யத் தவறுவதில்லை. அவர் ஹீரோவாக நடித்த 'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசமுத்திரம் அம்பானி' போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியதுடன், குடும்பத்தோடு பார்க்கலாம் என தைரியமாக சொல்ல வைத்தன. இதில் 'அம்பாசமுத்திரம் அம்பானி'யைத் தயாரித்தவரும் அவரே. இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். படத்தின் பெயர் 'ரகளைபுரம்'. ஹீரோ-காமெடியன்-தயாரிப்பாளர் கருணாஸ்தான். இவருக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடிப்பவர் அங்கனா. கவர்ச்சியின் கடைசி எல்லை வரை ஒரு கை பார்க்கப் போவதாக களமிறங்கியிருக்கும் 'ரேணிகுண்டா' அஞ்சனா சிங்கும் படத்தில் உண்டு. கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றபடி கருணாஸின் வழக்கமான காமெடி பட்டாளம் இதில் களமிறங்குகிறது. வைரமுத்துவின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சுந்தர் சி உதவியாளராக இருந்த மனோ இயக்குகிறார். "படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி வரை இரண்டரை மணி நேரம் போனதே தெரியாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு," என்கிறார் கருணாஸ்.

Comments