கோலிவுட்டைபோல் மலையாளத்தில் ஹீரோயின்கள் சம்பளம் உயர்ந்தது!!!

Wednesday,April,11,2012
கோலிவுட்டைபோல் மல்லுவுட்டிலும் ஹீரோயின்கள் சம்பளம் உயர்ந்து வருகிறது. கோலிவுட், டோலிவுட் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகள் சிலரின் சம்பளம் லட்சங்களில் தொடங்கி இன்று கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மலையாள படங்களில் குறைந்த சம்பளமே கிடைக்கிறது என்பதால் முன்னணி நடிகைகள் அங்கு நடிக்க தயக்கம் காட்டி வந்தனர். இப்போது மல்லுவுட்டிலும் படிப்படியாக ஹீரோயின்கள் சம்பளம் உயரத் தொடங்கி உள்ளது.

‘குரு என் ஆளு' படத்தில் நடித்த மம்தாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு மலையாள படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வேடத்தில் மம்தாவால்தான் சிறப்பான நடிப்பை தர முடியும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் முடிவு செய்ததையடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக ரூ.15 லட்சம் சம்பளம் பெற்றார். இதுவரை மலையாளத்தில் மம்தா வாங்கிய சம்பளத்தில் அதிக தொகை இதுதான் என்று கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து காவ்யா மாதவன் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு இவர் ரூ.17 லட்சம் சம்பளம் பெறுகிறார். மற்ற மொழிப்படங்களில் நடிக்க இவர்கள் ரூ.15 லட்சம் முதல் 30 லட்சம்வரை சம்பளம் கேட்கிறார்களாம். ஹீரோயின் சம்பளம் உயர்ந்ததைதொடர்ந்து, மலையாளத்தில் ஹீரோக்கள் சம்பளமும் அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது.

Comments