Saturday, April, 21, 2012
தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எந்த ஒரு இயக்குநரோ, நடிகையோ பேட்டி அளித்தால் அஜித்தை இயக்க வேண்டும், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. கௌதம் மேனன் அஜித்தை வைத்து இயக்க திட்டமிட்ட படம் கைவிடப்பட்டது. இருவருமே தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். கௌதம் மேனனுக்கு அஜித்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை. அஜித் படம் குறித்து கௌதம் மேனன் கூறியதாவது, "எனக்கு அஜித்கூடவும் வொர்க் பண்ண ஆசை. அஜித்தைப் பத்தி நான் ஏதோ தப்பா சொன்னதா சோஷியல் மீடியாக்களில் வதந்தி. 'டேய் நீயா சொன்னே?'னு அவர் ரசிகர்கள் ஸ்டேட்டஸ் போட்டு மிரட்டுறாங்க. ஆனா, சமீபத்தில் அஜித்தைச் சந்திச்சப்ப, நான் என்ன பேசினேன்னு விவரமா சொன்னேன். 'விடுங்க கௌதம்... அதைப் பத்திலாம் நான் கண்டுக்கலை'ன்னார். அவர்கூட கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்!" என்று தெரிவித்து இருக்கிறார்.

Comments
Post a Comment