ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் நடிகர்கள் மனைவியுடன் பிரியங்காவுக்கு பிரச்னை!!!

Tuesday, April, 03, 2012
ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் பிரியங்கா சோப்ராவுக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷனின் மனைவிகள் அவர் மீது கோபமாக உள்ளதாக தகவல் பரவியுள்ளது. சினிமா உலகில் ஹீரோக்களுடன் பார்ட்டி பட விழாக்களுக்கு சேர்ந்து போகும் நடிகைகள் உள்ளனர். பெரும்பாலும் திருமணம் ஆகாத ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஜோடியாக வலம் வருவார்கள். ஆனால் பிரியங்கா சோப்ரா சற்று வித்தியாசமானவர். ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷன் அக்ஷய் குமார் என திருமணமான நடிகர்களுடன் பட விழா பார்ட்டிகளுக்கு செல்வார். இது பற்றி பிரியங்கா கூறுகையில் ஷூட்டிங் முடிந்ததும் சில பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.

அப்போது அதே பார்ட்டியில் பங்கேற்க என்னுடன் ஷூட்டிங்கில் இருந்த ஹீரோவுக்கும் அழைப்பு வந்திருக்கும். அந்த நேரத்தில் இருவரும் சேர்ந்து போவது தவிர்க்க முடியாதது என்கிறார். ஆனால் இது ஷாருக்கான் மனைவி கவுரி ஹிருத்திக் மனைவி சூசனிடம் புகைச்சலை கிளப்பியுள்ளது. பிரியங்காவுடன் நட்பாக இருந்த இவர்கள் சமீபகாலமாக அவருடன் பேசுவதில்லை. சமீபத்தில் விழா ஒன்றில் கவுரியும் சூசனும் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு பிரியங்கா வந்தபோது அவரை கண்டுகொள்ளவே இல்லையாம். முகம் வாடிய நிலையில் அங்கிருந்து வெளியேறியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவை சந்திப்பதையும் அவருடன் பேசுவதையும் தவிர்த்து வருகிறாராம் ஷாருக்கான். மனைவி கவுரிக்கு பிடிக்காததால்தான் ஷாருக் இப்படி நடந்து கொள்கிறார் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Comments