Tuesday, April, 17, 2012
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமையன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி வரும்..வரும்...வந்துவிடும்.. என்று ஊடகங்கள் அலறிக் கொண்டிருந்த நேரம்... கடலோர கிராமங்கள் எச்சரிக்கையாக தவித்துக் கொண்டிருந்த தருணம்...நடுக்கடலில்.. சென்னை கடற்பரப்பில் இருந்து 200 மைல் தொலைவில். சொகுசுக் கப்பலில் விருந்தில் கலந்து கொண்டிருந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். சென்னை அருகே முகாமிட்டுள்ள அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்ஸ் கப்பலில் நடந்த விருந்தில்தான் கமல்ஹாசனும் பங்கேற்றிருந்தார்.. அமெரிக்க போர்க் கப்பலில் நடைபெற்ற விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகரும் கமல்தான்! உலகமே சுனாமி சுனாமி என்று கத்திக் கொண்டிருந்த நேரத்தில் கப்பலில் இருந்த எனக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை என்கிறார் கமல். கமலின் புதிய படமான 'விஸ்வரூப'த்தில் சர்வதேச அமைதி மற்றும் புலனாய்வு தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் விருந்தில் கலந்து கொண்ட கப்பல், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கடலில் புதைத்த கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment