சினிமா இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் விதத்தில் பேசிய ஜெயம் ரவி!!!

Monday, April, 23, 2012
ஆந்திராவில் பிரபலமான “பவ்யா சிமெண்ட்ஸை’ சென்னையில் அறிமுகம் செய்யும் விழா சமீபத்தில் சென்னை வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பவ்யா சிமெண்ட்டை அறிமுகம் செய்து வைத்த ஜெயம் ரவி, பேசிய பேச்சு நம் திரைப்பட இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் விதத்தில் இருந்ததுதான் ஹைலைட்!

இனி ஜெயம்ரவி பேசுகிறார். நான்தான் பவ்யமான ஆளுன்னு பார்த்தால் பவ்யா சிமெண்ட் மேனேஜிங் டைரக்டர் ஆனந்த பிரசாத்தும் பவ்யா சிமெண்ட்டை தமிழகத்தில் வாங்கி விற்பனை செய்யவுள்ள பார்ரூன் நிறுவன தலைவரும் அம்பிகா டிரேடிங் எண்டர்பிரைசஸ் தலைவருமான ஜெ. ராமஞ்சிநேயலு மற்றும் இயக்குநர் சி.வி.ராவ் உள்ளிட்டவர்கள் என்னைவிட பவ்யம் காட்டுகின்றனர். பவ்யா சிமெண்ட்டை தமிழகத்திற்கு தர இருப்பவர்கள் விவசாய குடும்பத்தில் இரந்து வந்தவர்கள் என்பதால்தான் நான் இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன்.

என்னை வைத்து “பேராண்மை’ படம் தந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சொல்வார்., இந்தியாவின் தரிசு நிலங்களை விளைச்சலுக்கு ஏற்ற நிலங்களாக விவசாயிகள் முயற்சி செய்து மாற்றினால், உலகத்திற்கே இந்தியாவால் சோறு போட முடியும் என்பார். அதுமாதிரி ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களின் சிமெண்ட் தான் இந்த பவ்யா சிமெண்ட் என்பதால்தான் இங்கு வந்தேன். நான் இங்கு வந்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அது சிமெண்டுக்கும் சினிமாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு! இரண்டிலும் கலவை நன்றாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும்! சமீபமாக கலவை சரியில்லாமல் வரும் சினிமாக்கள் மாதிரி இல்லாமல் பவ்யா சிமெண்ட் சரியான கலவையில் உறுதியாக இருக்குமென்று நம்புகிறேன்! தமிழக மக்களும் நம்பட்டும்!! - என்று சிலேடையாக பேசி இன்றைய சினிமா இயக்குநர்களுக்கு சூடு வைக்கும் அளவிற்கு பேசினார்

Comments